Freelancer / 2022 மே 25 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணாலே' என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன்சங்கர் ராஜா மற்றும் சித்ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர்.
குறிப்பாக சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலுக்கு ரசிகர்கள் மயங்கியே விட்டனர் என்று கூறலாம்.

இந்த பாடலை கருமாத்தூர் மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலின் இனிமையான சில வரிகள் இதோ:
"கஞ்சா பூ கண்ணாலே செப்பு சிலை உன்னாலே
இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னாலே
கஞ்சா பூ கண்ணாலே செப்பு சிலை உன்னாலே
இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னாலே"

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

51 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026