2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சுரேஷ் சக்ரவர்த்தி - அனிதா இடையே இன்றும் சண்டை

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையேயான பிரச்சினை இன்றும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து செய்தி வாசிப்பது போல பேசி காட்டினார். 

சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி அனிதா சம்பத் செய்தி வாசித்த போது, அவரை கிண்டல் செய்யும் வகையில் சுரேஷ் சக்ரவர்த்தி "நான் தள்ளி நிற்கிறேன். சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும்" என கூறினார்.

அதற்குப் பிறகு செய்தி வாசிப்பவர்களுக்கு எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னது தனக்கு வருத்தம் அளித்தது என அனிதா சம்பத் அவரிடம் பேசினார். அந்த வாக்குவாதம் நேற்று சண்டையில் முடிந்தது. 

நீண்ட நேரம் கழித்து அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் கை குலுக்குவது போல சமாதானம் அடைந்தார்கள்.

நேற்று சமாதானம் அடைந்த அவர்கள் இருவரும் இன்று மீண்டும் சண்டையை தொடங்கி இருக்கிறார்கள் என்பது தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, என்னை செருப்பால் அடிப்பவர்கள் உடன் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை' என சுரேஷ் சக்ரவர்த்தி கூறும்போது அருகில் இருக்கும் பாலாஜி முருகதாஸ், 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றால் அப்போது எருமை மாட்டுக்கு என்ன சூடு' என கேட்கிறார். அதைக் கேட்ட அனிதா சத்தமாக சிரித்து விடுகிறார்.

இப்படி இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருப்பதால் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் இடையேயான பிரச்சினை இன்னும் பெரிய அளவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X