Mayu / 2024 ஜூலை 22 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புஸ்பராசா மயூரதி
இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியொன்று செப்டெம்பர் 7ஆம் திகதி சுகததாச உள்ளகரங்கில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக ஞாயிற்றுக்கிழமை (21) One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, செருப்பு அணியாது ஊடக சந்திப்பிற்கு வந்ததையடுத்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அது ஒரு மாற்றத்திற்கு தான்” நீங்களும் செருப்பில்லாமல் நடந்து பாருங்கள் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகும்” என தெரிவித்ததோடு, இலங்கை கலைஞர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்பு தருவதாகவும் இலங்கையில் படப்பிடிப்பு மேற்கொள்வாதாகவும் தெரிவித்தார்.

அதில் பெருந்திரளான ரசிகர்களும் கலந்துகொண்டிருந்ததுடன்,விஜய் அன்டனி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதேவேளை, பின்னனி பாடகர்களும் கலந்துக்கொண்டு சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இதன்போது, இலங்கையின் முன்னனி இசை கலைஞர்களில் ஒருவரான இராஜ் வீரரத்னவின் பாடல்களை வழங்கியமை மற்றும் புகழ்பெற்ற சொல்லிசை கலைஞர் தினேஷ் கனகரத்னம் என இலங்கைக்கும் அவருக்குமான தொடர்பினை நினைவுகூரியதார்.

அத்தோடு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சகோதர மொழி பாடல்களையும் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதில் தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரதான அனுசரணையாளர்களான ஆரா என்டடைமன்ட்டின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராமநாதன் மற்றும் சதீஸ் ஜுவல்லரியின் நிர்வாகப் பணிப்பாளர் இராமையா சதாசிவம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

33 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
9 hours ago