Editorial / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அவரது தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, இதுவரை 6 பேரைக் கைது செய்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் லீக்கானது சினிமாத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்:
“மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய் இதனைத் தெளிவுபடுத்தியிருந்தார். 'நான் அரசியலுக்குப் போகிறேன், என்னை வைத்துப் படம் எடுக்கும்போது பல பிரச்சினைகள் வரும்' என்று தயாரிப்பாளர்களிடம் அவர் முன்னரே கூறியிருந்தார். எனவே, இவ்வாறான முட்டுக்கட்டைகள் வரும் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.”
தொடர்ந்து பேசிய அவர், “ஒருவரை முதலில் மனரீதியாகவும், பின்னர் பணரீதியாகவும் முடக்க நினைப்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக்கானது எதிர்க்கட்சியினரின் சதியாக இருக்கலாம் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. அதனால், இந்தப் படம் லீக்கானது குறித்து நான் அதிர்ச்சியடையவில்லை; மாறாக இதனைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்,” என்று தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவரது தந்தையின் இந்தப் பேச்சு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago