2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஜெய்-அஞ்சலி திருமணம்?

George   / 2016 ஜூலை 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்தி கசிந்து வருகின்றது. 

அண்மையில், ஜெய் அளித்த பேட்டி ஒன்றில் “அஞ்சலி எனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் . ஆனால் இந்த உறவு திருமணம் வரை செல்லுமா? என்பது எனக்கு தெரியாது” என்றும் கூறியிருந்தார். 

அதேபோல் 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்துக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய்யுடன் 'பலூன்' என்ற திரைப்படத்தில் இணைந்த அஞ்சலி தனது பிறந்த நாளில், இந்த பிறந்த நாள் தனக்கு வித்தியாசமான பிறந்த நாள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். 

'பலூன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஜெய்-திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. உண்மையிலேயே திருமணம் நடக்குமா? அல்லது 'பலூன்' திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக ஒருசிலர் கதை கட்டி விடுகின்றார்களா? என்பது விரைவில் தெரியவரும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .