2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

டுவிட்டால் சர்சையில் சிக்கிய கமல்

George   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக நாயகன் கமல் ஹாஸன், ஜெயலலிதாவை அடுத்து சோவின் மறைவுக்கும் பெயரை குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார் .
 
 ஜெயலலிதாவின் மரண செய்தி அறிந்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த உலக நாயகன் கமல் ஹாஸன், “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று மொட்டையாக ட்வீட்டினார்.
 
விஸ்வரூபம் பிரச்சினையை மனதில் வைத்தே கமல் இப்படி ட்வீட் போட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மரணத்துகும் அதே போன்று பெயரைக் குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் போட்டுள்ளார்.
 
இதை பார்த்தவர்கள் கமலை விமர்சித்து கருத்து வௌியிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X