S.Renuka / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் மற்றும் பொலிவூட் நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் செய்ய உள்ளதாக காதலர் தினத்தன்று பரவிய வதந்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவல் பொலிவூட் ஊடகங்களில் முதலில் வெளியாகி, பின்னர் கோலிவூட்டிலும் தீவிரமாக பேசப்பட்டது.
பெப்ரவரி 14ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அந்த செய்தி விரைவாக வைரலானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, இரு தரப்பினரிடமும் விளக்கம் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் மிருணாள் தாக்கூர் தானே அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெளிவுபடுத்தினார்.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய மிருணாள் தாக்கூர், “எனக்கும் தனுஷுக்கும் பெப்ரவரி 14ஆம் தேதி திருமணம் என எப்படி இந்த வதந்தி பரவியது என எனக்கே புரியவில்லை. அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இந்நேரம் எங்களுக்கு திருமணம் ஆகி இருப்பதாக இருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறினார்.
மேலும், “தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘தேரே இஷ்க் மே’ படத்தின் நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய சில புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து இந்த வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்” என்றார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் ஆச்சரியமான கருத்தையும் தெரிவித்தார்.
“எனக்கு இதுவரை தனிப்பட்ட பிஆர் டீம் இல்லை. இப்போது என் வீட்டு முகவரியும் பொது தகவலாக மாறிவிட்டது. அதனால் விரைவில் ஒரு பிஆர் டீம் அமைக்க நினைக்கிறேன். உண்மையாக சொல்கிறேன், 3 கோடி, 6 கோடி, ஏன் 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படிப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்திருக்காது. எனவே இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் போல இருக்கிறது,” என்று கலகலப்பாக கூறினார்.
மிருணாள் தாக்கூரின் இந்த பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுடன், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், மிருணாள் தாக்கூர் நடித்துள்ள இந்தி படம் ‘O Deewane Seher Mein’ பெப்ரவரி 20ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘டக்காயிட்’ அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .