2022 ஜூலை 04, திங்கட்கிழமை

தனுஷ் அறிவித்த அதிரடியான அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 23 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருக்கின்றார்.

தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த தனுஷிற்கு சமீபகாலமாக வெளியான அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் ழுவுவுயில் வெளியாகி படு தோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக மாறன் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மீண்டும் வெற்றி பாதைக்கு செல்லும் முனைப்பில் தனுஷ் இருக்கின்றார்.

தற்சமயம் செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படமான திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் ஜூன் 24 ஆம் திகதி வெளியாகின்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதாவது தனுஷ் மற்றும் அனிருத் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ஜூன் 24 ஆம் திகதி வெளியாகின்றது. 

இதனை வித்தியாசமான ப்ரோமோவின் மூலம் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தனுஷ் ஏழு வருடங்களுக்கு பிறகு அனிருத்தின் கூட்டணியில் வெளியாகும் சிங்கிள் என பதிவிட்டுள்ளார். மேலும்  "தாய் கிழவி" என துவங்கும் இப்பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .