R.Tharaniya / 2025 நவம்பர் 03 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படம் கடந்த மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் அடுத்தடுத்து நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
D54 (பெயரிடப்படாததால் D54 என அழைக்கப்படுகிறது). இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
D56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
D57 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் D55 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே பீஸ்ட், கூலி படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை, நமது சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும், நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவர்கள் பற்றியது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
13 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago