Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷின் 55-வது படத்தை ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாக உள்ளது. இது தவிர தெலுங்கு இயக்குநர் சேகர்கமுலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதனிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து உருவாகும் தனுஷின் 55-வது படத்தை, அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பை பெற்றிருக்கும் ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்பு செழியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன. இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. படம் குறித்த மற்ற தகவல்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை.

4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025