2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தமன்னாவின் நல்லெண்ணம்

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேடி படத்தில் தமிழ் திரையுலகுக்கு வந்த தமன்னா, 10 ஆண்டுகளாக நடித்து வருகிறார். விஜயசேதுபதியுடன் தர்மதுரை, பிரபுதேவாவுடன் தேவி போன்ற படங்களில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் போன்ற வேறு சில ஹீரோக்களுடன் நடிப்பதற்காகவும் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பாகுபலி, தோழா போன்ற இருமொழிப்படங்களின் வெற்றிக்குப்பிறகு தனது மார்க்கெட்டை இன்னும் ஸ்டெடி பண்ணி வருகிறார் தமன்னா.

மேலும், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தபோதும், கதைதான் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்லி, கதை பிடித்தால் மட்டுமே ஓகே பண்ணுகிறார். அதுபற்றி தமன்னா கூறுகையில், 'படத்தின் வெற்றிக்காக நாம் எவ்வளவு உழைத்தாலும் அந்தக் கதையை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு படத்தின் தோல்வி காரணமாக நட்டம் ஏற்படுகிறது. அதனாலேயே, பிடிக்காத பட்சத்தில் எனது கருத்தை அவர்களிடம் ஓப்பனாக சொல்லி விடுகிறேன். என்னை வைத்து படம் தயாரிப்பவர்கள் நட்டப்படக்கூடாது என்பதோடு, நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கின்றது' என்றாராம் தமன்னா.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X