Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு வெளிப்படையாகச் சவால் விடுத்துப் பதிவிட்டுள்ளார்.
“நான் டி.என்.ஏ. பரிசோதனையை மறுக்கவில்லை, குழந்தை என்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் கவனித்துக் கொள்வேன்” என்று ரங்கராஜ் முன்பு தெரிவித்திருந்த நிலையில், “என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவுசெய்து டி.என்.ஏ. டெஸ்டுக்கு வர சொல்லுங்க.
ஸ்டேட்மென்ட் விட்டு 15 நாள் ஆச்சு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு. தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து டெஸ்டுக்கு வாங்க கணவரே” என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ரங்கராஜ் டிஎன்ஏ பரிசோதனைக்கு வரவில்லை என்று ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
15 minute ago
20 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
33 minute ago