2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தல 56 தலைப்பு இன்று தெரியும்

George   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீரம் திரைப்படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள அவரது 56வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை என்பன விநாயகர் சதூர்த்தியான இன்று வியாழக்கிழமை(17) வெளியிடப்படவுள்ளன.

தல 56 திரைப்படத்துக்கு தலைப்பு  வைக்கப்படாமலேயே இதுவரை, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கொல்கத்தா, சென்னை என பல இடங்களில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

இந்தத் திரைப்படத்தில் ராகுல்தேவ், கபீர்கான் போன்ற அதிரடி வில்லன் நடிகர்கள் நடித்துள்ள நிலையில், தற்போது கிரண் என்ற ஆர்ட் இயக்குநரும் இன்னொரு வில்லனாக நடித்துள்ளாராம்.

பல திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக கடமையாற்றியிருக்கும் இவர், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை, ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிப்படவுள்ளதாகவும் திரைப்படம், நவம்பர் மாதம் 5ஆம் திகதி வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .