Freelancer / 2022 மே 23 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரிய அளவில் வசூலை குவித்துள்ளது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தளபதி 66 திரைப்படம் முடிந்ததும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகிவிட்டன.
அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார்.
மேலும் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் திகதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அவர் பட அப்டேட்ஸ் வெளியாவது வழக்கமாகும்.
அதேபோல் இந்தமுறை தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தளபதி 67 பட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 minute ago
43 minute ago
55 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
55 minute ago
58 minute ago