J.A. George / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்த பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தளபதி 67’ படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பகத் பாசில், ‘லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் நானும் அந்த படத்தில் இருக்கலாம் என்று கூறினார்.
ஏற்கனவே ’கைதி’ படத்தில் இடம்பெற்ற டெல்லி என்ற கேரக்டரும் ’தளபதி 67’ படத்தில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் தற்போது பகத் பாசிலும் இருக்கிறார் என்ற தகவல் இந்த படத்தை மிகப்பெரிய அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025