2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

திருமண பந்தத்தில் இணைந்த ‘ராஜா ராணி’ நாயகன்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சியில் அண்மைக் காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள தொடராக   ‘ராஜா ராணி- 2 ”  தொடர் காணப்படுகின்றது.

இத்தொடரானது தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்  சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இத் தொடரின் கதாநாயகனான  சித்துவும் ( சரவணன்) அவரது காதலியும் சின்னத் திரை நடிகையுமான  ஸ்ரேயாவும், நேற்று முன்தினம்   திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

சித்துவும் ஸ்ரேயாவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற தொடரில் ஒன்றாக  நடித்த போது காதல் வயப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறன.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X