Janu / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் வியாழக்கிழமை (26) காலை திருமணம் நடைபெற்றது.
நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த தினங்களில் நடைபெற்றது.
இருப்பினும் அதிகாரப்பூர்வ விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

4 hours ago
6 hours ago
27 Feb 2026
26 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
27 Feb 2026
26 Feb 2026