2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

திரையுலகில் மற்றுமொரு மறைவு

Editorial   / 2021 மே 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'என்னடி முனியம்மா உன் கண்ணுல மை' பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டி.கே.எஸ் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை தனது 87ஆவது வயதில்  காலமானார்.

1954ஆம் ஆண்டு வெளியான இரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் என்று பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த இவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னை கவனிக்கச் செய்தவர்.

இ​தேவேளை, கடந்த வாரம்  இயக்குநர்களான தாமிரா, கே.வி. ஆனந்த், மூத்த நடிகர் செல்லத்துரை என மூவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று நடிகர்  நடராஜன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .