Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 12 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் பிரபலமான பாடகியாக வலம் வரும் ஸ்ரேயா கோஷலின் பிறந்தநாள் இன்று. மொழிகளைக் கடந்து தன் தேன் குரலால் பலரது மனதைக் கொள்ளை கொண்டுள்ள ஸ்ரேயா கோஷல், 1984ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாடல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று ஒரு பாடகியாக அனைவராலும் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்தது.
அந்த படத்தில் அவர் பாடிய 'சலக் சலக்' பெரிய வெற்றி பெற்றது. இப்படியாக வெற்றியுடன் தொடங்கிய இவரது இசைப்பயணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரந்து விரிந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட அனைத்து மொழி மக்களும் அவரது குரலுக்கு அடிமையாகத் தொடங்கினர்.
மொழி தெரியாமல் பாடுவதால் வார்த்தை உச்சரிப்பில் சில பாடகர்களுக்கு சிக்கல் இருக்கும். ஆனால் சில பாடகர்கள் தெரியாத மொழியில் பாடும் போது கூட வார்த்தை உச்சரிப்புகள் மிகவும் தேர்ந்ததாய் இருக்கும். தெரியாத மொழியிலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளை உச்சரிப்பதே ஸ்ரேயா கோஷலின் மிகப்பெரிய வெற்றிக்கான காரணம்.
சில ஆண்டுகளில் பல விருதுகளை வாங்கிக் குவித்தார். இந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றினார்.
ஒரு மொழியில் கிராமப்புறம் சார்ந்த பாடல், நகர்ப்புறம் சார்ந்த பாடல் இப்படி எந்தவிதமான பாடலையும் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பாடியுள்ளார். தமிழில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவை.
'ஆல்பம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'செல்லமே.. செல்லம்' பாடல் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இன்றுவரை உச்சத்தில் திகழ்கின்றார். தமிழ் மொழி பெரிதாக தெரியாதபோதும், அந்த தமிழ் மொழியிலேயே தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டவர் ஸ்ரேயா.
ஜூலி கணபதியில் 'எனக்குப் பிடித்த பாடல்', இசைஞானியுடன் 'பிதாமகனில்' இணைந்து 'இளங்காத்து வீசுதே', 'விருமாண்டி'யில் 'உன்னவிட இந்த உலகத்துல உசந்து ஒண்ணுமில்ல', '7 ஜி ரெயின்போ கொலனி'யில் 'நினைத்து நினைத்து' போன்ற பல பாடல்கள் ஸ்ரேயா கோஷலுக்கு பெரும் புகழ் தேடித்தந்தவை.
குரலுக்கு ஓய்வு கொடுக்காமல் இசை இரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ள ஸ்ரேயா கோஷல், இதுவரை 20 மொழிகளில் 5,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மிகவும் வியப்பான விடயம். S
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago