2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொழிலதிபராக மாறும் புன்னைகை அரசி

Mayu   / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில், 2020 ஆம் ஜனவரி 24 ஆம் திகதி சினேகாவுக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. இதையடுத்து சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த விஜய்யின் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கமைய, சினேகா தொழிலதிபராக காலடி எடுத்து வைக்கவுள்ளார். சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுப்புடவைகளுக்கான கடையை சென்னை தி நகரில் அவர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X