2025 மே 21, புதன்கிழமை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரங்கல் செய்தி

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரளான நடிகர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, கோவை சரளா, கௌதமி, ராஜேஷ், நந்தா, ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா உள்ளிட்ட பலர் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர், “இன்று மறைந்தது தனி மனிதர் அல்ல, ஒரு சகாப்தம் நிறைவுபெற்று இருக்கிறது. நடிகையாக, அரசியல் தலைவராக அவர் பயணித்த எல்லாவற்றிலும் உச்சத்தை பெற்றிருக்கிறார். பெண் நினைத்தால் எந்தளவுக்கு முன்னேற முடியும், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு என்பது அவர் ஒரு உதாரணம்.

எங்களுடைய சங்கத்தில் அவர் மூத்த உறுப்பினராக இருந்தது எங்களுக்கு எல்லாம் பெருமை. அவரின் சக்தி, செயல், மனோதைரியம் எல்லாம் யாருக்கும் வர முடியாது. அவரை இழந்து வாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர் பயணித்த பாதையில் நாங்கள் பயணிப்போம்” இவ்வாறு நாசர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .