2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

திருமணத்துக்குப் பின்னர் சமந்தா நடிப்பாரா?

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகசைதன்யா-சமந்தா காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ள இப்போதே அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் திருமணத்துக்குப் பின்னர் அவர் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள நாக சைதன்யா, “திருமணத்துக்கு பின்னர் நடிப்பதா? வேண்டாமா? என்பது சமந்தாவின் சொந்த விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். திரையுலகில் அவருடைய தற்போதைய நிலையை பார்த்து பெருமைப்படுபவன் நான்.

திருமணத்துக்கு பின்னர் நடிப்பது என்று சமந்தா முடிவெடுத்தால் நானோ அல்லது எனது குடும்பத்தினர்களோ கண்டிப்பாக தலையிட மாட்டோம்”  என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X