2025 மே 17, சனிக்கிழமை

திறந்த புத்தகம்

George   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்கும் எதிர்காலத்தில் சுயசரிதை எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனால், என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை என பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

நான் எழுதும் சுயசரிதையில் மற்றவர்களுக்கு தெரியாத விடயங்கள் எதுவும் இருக்காது. அதனால் அதில் நான் ஏதாவது ரகசியங்களை எழுதுவேன் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அது ஏமாற்றத்தையே கொடுக்கும் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

சில நடிகைகள் சுயசரிதை எழுதுவது பற்றி கருத்து தெரிவிக்கையில் சன்னிலியோன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிவூட் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் சன்னி லியோன், விரைவில் ஒரு திரைப்படத்தை தயாரித்து அதில் அவர் சூப்பர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள சன்னி லியோன், நான் தயாரிக்கும் அந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. அதில் நானும் நடிக்கிறேன். மற்றபடி நான் சூப்பர் ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .