2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

துறுதுறு பெண்ணாக அனுபாமா

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேமம் மலையாள திரைப்படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் நடித்துள்ள கொடி திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு வந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் முதலில் ஷாலினியின் தங்கை ஷாம்லிதான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகிக்கொள்ளவே அனுபமா ஒப்பந்தமாகி நடித்தார்.

இந்த திரைப்படத்தில் தனுஷ்-திரிஷாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றாலும், இளவட்ட நாயகியாக நடித்துள்ள அனுபமாவின் பாத்திரத்துக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அவரது முதல் காட்சி, காரில் வந்து வீதயோர கடைகளை இடித்து தள்ளுவது போன்று படமாக்கப்பட்டுள்ளதாம்.

தனுசுக்கு ஜோடியாக நடித்த காட்சிகளில் துறுதுறு பெண்ணாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் அனுபமா பரமேஸ்வரன். அதனால் இந்த ஒரே திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் அவர் எளிதாக இடம்பிடிப்பார் என்கிறார்கள்.


  Comments - 0

  • MM Thursday, 10 November 2016 06:53 AM

    சூப்பர் அனுபமா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .