2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தெறி பேபி... விஜய்க்கு நயன் பாரட்டு

George   / 2016 ஏப்ரல் 18 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தெறி திரைப்படத்தையும்; விஜய் நடிப்பையும் நடிகை நயன்தாரா பாராட்டியுள்ளார்.

தெறி  திரைபிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் திரைப்படத்தை பார்த்துவிடடு நயன்தாராவும் பாராட்டி இருக்கிறார். 

இதுபற்றி நயன்தாரா கூறும்போது, 'தெறி திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இது பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வு பூர்வமான கதை. விஜய்யின் நடிப்பு இரசிகர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறது. இது அaனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். தெறி திரைப்படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' என்று சொல்லியுள்ளார்.

அண்மைகாலமாக தனது திரைப்படம் மட்டுமின்றி ஏனைய நடிகர், நடிகைகளின் திரைப்படங்களை திரையரங்குக்குச் சென்று பார்த்து இரசிக்கும் நயன்தாரா, இரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கின்றது என்றும் நேரில் பார்த்து வருகின்றாராம்.

நள்ளிரவு நேரத்தில்கூட தனது நண்பிகளுடன் திரையரங்குகளுக்குச்  சென்று வரும் நயன், தெறி திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த நள்ளிரவில் தெறி இயக்குநர் அட்லிக்கு அலைபேசியூடாக தொடர்பு கொண்டு வாழத்து தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X