2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

த.வெ.க மாநாடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவெக மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. 

ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது, தவெகவுக்குள்ளும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் 2வது மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு சுமார் 8 மணி வரை மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநாட்டு திடலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

60க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மயங்கி விழுந்தனர்.. இதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாநாட்டுத் திடலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ உதவி முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, தவெக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து மதுரைக்கு வந்த பிரபாகரன் (வயது 33) என்ற இளைஞர் மதுரை வந்துகொண்டிருந்தார். சக்கிமங்கலம் அருகே இயற்கை உபாதை கழிக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுபோலவே, மாநாட்டிற்கு வந்த மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (வயது 18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

ஏற்கனவே, மதுரை தவெக மாநாட்டிற்காக விருதுநகரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை வரவேற்று பேனர் வைக்கும் போது காளீஸ்வரன் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. நேற்றைய தினம் 2 இளைஞர்கள் உயிரிழந்தது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X