2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யூடியூப்பர் மீது முறைப்பாடு

Simrith   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட உள்ளதாகக் கூறும் பதிவை பதிவேற்றிய யூடியூபர் சுதந்த திலகசிறிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சட்டத்தரணிகள் முறைப்பாடு அளித்தனர்.

இந்தக் கைது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சந்தேகங்கள் இருப்பதாக சட்டத்தரணி நளின் பத்திரண ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

"தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே, இந்த யூடியூபர் நீதிமன்றங்களின் முடிவைப் பற்றி எப்படி அறிந்தார் என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே சந்தேகத்தை எழுப்பினர்.

சமீபத்தில் நடந்த பொது நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது அளவுக்கு அதிகமான ஆதரவு காட்டியதாக யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

"பிரதமர் போன்ற ஒரு ஆளுமைக்கு எப்படி இவ்வளவு ஆதரவை பொதுவில் காட்ட முடியும்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X