2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

Mayu   / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக்குறைவு காரணமா தனது  வயது 62 வயதில் செவ்வாய்க்கிழமை (02) காலமானார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார் விஸ்வேஷ்வர ராவ். தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர். தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட விஸ்வேஷ்வர ராவ் இதுவரை 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக காலமான விஸ்வேஷ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X