2025 நவம்பர் 24, திங்கட்கிழமை

நடிகர் தர்மேந்திரா காலமானார்

R.Tharaniya   / 2025 நவம்பர் 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார்.

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

இதற்கிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதுடன் தர்மேந்திராவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.

89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X