Editorial / 2025 நவம்பர் 24 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மிஸ்ஸோரி (Missouri) மாநிலத்தில், டிக்சன் (Dixon) பள்ளியில் பணிபுரிந்த 30 வயதான ஆசிரியை கேரிஸ்ஸா ஜேன் ஸ்மித் (Carissa Jane Smith), தான் பணிபுரிந்த பள்ளியின் நடுத்தர வயது மாணவர்களை (Middle-School Students)ப் பணம், மது மற்றும் போதைப்பொருள் கொடுத்துத் தூண்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியை ஸ்மித், பல மாணவர்களுக்குச் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா வழங்கி, 100 டாலருக்கும் அதிகமாகப் பணம் கொடுத்து பாலியல் செயல்களில் ஈடுபடச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் சில மாணவர்களுக்குச் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) மூலம் ஆபாசப் படங்களையும் அனுப்பியுள்ளார்.
முதலில் அவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, குழந்தைகளைக் கடத்துதல் உட்பட 19 கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இறுதியில் மூன்று குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
1 hours ago