2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நடிகர் ’’அடடே’’ மனோகர் காலமானார்

Freelancer   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர், "அடடே" மனோகர், தனது 82ஆவது வயதில் காலமானார். பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள மனோகர், சுமார் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் நடித்து பிரபலமடைந்த இவர், "சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை", "கையளவு மனசு", "நிம்மதி உங்கள் சொய்ஸ்", "ரமணி வெர்சஸ் ரமணி", "இரயில் சிநேகம்" உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வெளியான "அடடே மனோகர்"  தொடரை எழுதி இயக்கி நடித்து பிரபல்யமடைந்ததால், "அடடே மனோகர்" என அழைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன் தினம் 28ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X