Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 09 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.
முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சனிக்கிழமை (08) வந்தடைந்த சிவகார்த்திக்கேயனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .