2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடிகர் மதுரை மோகன் காலமானார்

Mayu   / 2023 டிசெம்பர் 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில் இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.

விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை 'முண்டாசுப்பட்டி' படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X