2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நடிகை கீர்த்தியும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

Editorial   / 2021 மே 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  அனைவரையும் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளும் படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசியை செலுத்துவதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷும்  நேற்றைய தினம் கொரோனாத் தடுப்பூசியினைச் செலுத்திக்கொண்டார்.

சமீபத்தில்  ரஜினி காந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா,ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சித் தொகுப்பாளினி  டிடி உள்ளிட்டோர் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X