2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நடிகை சமந்தாவின் ஆன்மீக பயணம்

J.A. George   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அது மட்டுமின்றி வட இந்திய ஆன்மிகச் சுற்றுலாவுக்கு தனது தோழியுடன் சென்றார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு சென்று உள்ளார். அண்மையில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனை அடுத்து கடப்பாவில் உள்ள மசூதி ஒன்றுக்கும் சென்றுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா தர்காவுக்கு சமந்தா விசிட் அடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறன.

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் யசோதா, சாகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, மேலும் இரண்டு தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X