Editorial / 2025 ஜனவரி 08 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஹன்சிகா மீதும் அவரது அம்மா மீது ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி மனைவி வழக்குப் பதிவு செய்துள்ளார்.
‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தமிழில் வுமன் செண்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹன்சிகாவின் அண்ணியும், நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தன் மீது குடும்ப வன்முறை நடப்பதாகச் சொல்லி பொலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரில், “ஹன்சிகாவும், அவரின் அம்மா மோனாவும் எங்களது இல்லற வாழ்வில் தலையிட்டனர். இதனால், என் கணவர் பிரசாந்துடன் பிரச்சினை ஏற்பட்டது. இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டு என் கணவர் என்னை கொடுமைப்படுத்தினார். இதனால், எனக்கு முகத்தின் ஒரு பகுதி செயல் இழந்து விட்டது. சொத்து விஷயத்தில் என்னை மோசம் செய்கிறார்கள். நான் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும்கூட அதற்கு அவர்கள் அனைவருமே தடையாக இருக்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஹன்சிகா குடும்பம் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்க உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாகவே பிரசாந்த்- நான்சி ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
7 hours ago
16 Jan 2026