George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்கக்கூடிய திறமை உள்ளவர் என்பதால்தான் பழம்பெரும் நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரது நடிப்பின் சாயல் இல்லாத நடிகையே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கவுள்ளார்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைக்கதையை தயார் செய்துள்ள அவர், சாவித்திரியின் கேரக்டரில் நடிக்க நித்யாமேனனை அணுகியுள்ளார்.
'ஓகே கண்மணி' திரைப்படத்துக்கு பின்னர் நல்ல வாய்ப்புகளை பெற்று வரும் நித்யாமேனன், மகிழ்ச்சியுடன் சாவித்திரி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் மிக விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாவித்திரியின் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் இந்த திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த சாதகமான சம்பவங்களை மட்டுமே இயக்குநர் தொகுத்து வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .