2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

’நான் ரெடி’

Freelancer   / 2023 செப்டெம்பர் 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே” என்ற தெலுங்கு படம்.

வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான இந்த படம் தான் தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’யாரடி நீ மோகினி’ என்ற படமாக உருவானது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், 15 ஆண்டுகளுக்கு முன்பே 30 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்த நிலையில் அண்மையில், இந்த படத்தை தான் பார்த்ததாகவும் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணிபுரிந்த இனிமையான ஞாபகம் வந்ததாகவும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனின் இந்த டிவிட்டுக்கு பதில் அளித்த த்ரிஷா ’நான் ரெடி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா மீண்டும் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .