Janu / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாரா திருமணத்திறகுபிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் முதல் வெளியீடாக ஹிந்தி படமான ‛ஜவான்' வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து, தமிழில் ஜெயம் ரவி உடன் நடித்துள்ள ‛இறைவன்' படம் வெளியாக உள்ளது. தற்போது அவர் டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ப்ளாக் ஷிப் டுயுட் விக்கி இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிக்கின்றனர். ‛கோலமாவு கோகிலா படத்திற்கு பின் இருவரும் இணைந்து இந்த படத்தில் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'மண்ணாங்கட்டி' என பெயரிட்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (18) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட திரைப்படத்தை சான் ரோல்டன் இசையமைக்கிறதுடன், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

18 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
4 hours ago