2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

நயன் தாரா, விக்னேஷ் சிவன் கைது ?

Ilango Bharathy   / 2022 மார்ச் 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


”ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில்  நடிகை நயன்தாரா, மற்றும் இயக்குனர் விக்னேஷ் செயற்படுவதாகவும், இதனால் இருவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” எனவும்  பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சமூக ஆர்வலரே  இவ்வாறு புகார் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.

 ரவுடிகளை ஒழிக்க, தமிழகப் பொலிஸார்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில்  பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

எனவே ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்வதோடு, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X