2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நலமாக இருக்கிறேன், வதந்திகளை நம்ப வேண்டாம்: லியோனி (AUDIO)

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனது பேச்சை எதிர்கொள்ள முடியாதவர்கள் வேண்டுமென்றே நான் இறந்துவிட்டதாக கூறி வதந்திளை மீண்டும் பரப்பிவிட்டுள்ளனர்' என திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.

நகைச்சுவை பட்டிமன்றங்களில் கொடி கட்டிப் பறந்த திண்டுக்கல் லியோனி, திமுகவின் அரசியல் மேடைகளில் ஏறிய பிறகு அவர் இறந்துவிட்டதாக மூன்று முறை வதந்திகள் பரவின.

p>அந்த வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். இதேபோல் நேற்று சனிக்கிழமை விபத்தில் காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம்,

நேற்று சனிக்கிழமை சமூக வலைதளங்களில் புதுக்கோட்டை வீதி விபத்தில் நான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. அதனை பார்த்துவிட்டு எனது இரசிகர்கள் கிட்டதட்ட 500 பேருக்கு மேல் என்னை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் விசாரித்தார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி. நான் நலமுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை இரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கெனவே 3 முறை இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டது. பலமுறை விளக்கம் கொடுத்தேன். ஒருமுறை 10 நாள் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களில் பேசுவதினால், என்னுடைய பேச்சை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற ஒரு கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

கருத்து சுதந்திரத்துக்கும் பேச்சு சுதந்திரத்துக்கும் பெரிய பங்கமாக இருக்கிறது. இதுபோன்றவை இனி தொடரக் கூடாது என்பதுதான் என்னைப்போன்ற மேடைப்பேச்சாளர்களின் விருப்பம். மக்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை சிந்தித்துப்பார்க்க வேண்டும்' என்று லியோனி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .