Editorial / 2025 ஜனவரி 31 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராஷி கண்ணாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகை ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தவர். 2013-ல் வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் துணை நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் 2014-ல் வெளியான ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ராஷி கண்ணா. 2017-ல் வெளியான ‘வில்லன்’ மலையாள படத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களுக்கும் பரிட்சயமானார். தொடர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ மற்றும் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் மூலம் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். ராஷி கண்ணாவின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் நடித்துள்ள ‘அகத்தியா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.





4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025