Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 07 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த நாக சைதன்யா - சமந்தா ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர். மயோசிடிஸ் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வரும் சமந்தா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந் நிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷோபிதாவிடம், 'நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் காதலாமே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா பதிலளிக்கையில், "உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.
நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்'', என்று காட்டமாக பதிலளித்தார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago