Editorial / 2024 மார்ச் 02 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இருக்கும் டாப்ஸி, தன் நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப்பை சேர்ந்த நடிகை டாப்ஸி, தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான 'ஜுமாண்டி நாடம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகனார். தற்போது பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'டங்கி' படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம், டிசம்பர் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தில் டாப்ஸி, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிவுட்டின் பிஸியான நடிகையாக இருக்கும் டாப்ஸி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போ என்பவரை, கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் இந்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறும் இத்திருமணத்தில், இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும், அதன் பிறகு ராஜஸ்தானில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் திருமணம் குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டாப்ஸி, "என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் எப்பொழுதுமே பொது இடத்தில் பேசியது இல்லை என்றார். இனியும் அப்படித் தான் இருப்பேன்" என்றார். இதனால், டாப்ஸியின் திருமணம் தொடர்பாக வெளியான செய்தி, வெறும் வதந்தியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago