2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

படுக்கைக்கு அழைத்த தனுஷ்

R.Tharaniya   / 2025 நவம்பர் 18 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ்ன் மேலாளர் மீது நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிப்பதுடன் மட்டுமல்லாமல் திரைப்படங்களை இயக்கவும் செய்கிறார். எப்போதும், கைவசம் குறைந்தது 5 படங்களையும் வைத்திருப்பதால் இவர் நடிப்பில் ஆண்டிற்கு 2 படங்கள் வந்துவிடுகின்றன.

ஆனால், அடிக்கடி சில குற்றச்சாட்டுகளும் தனுஷ் மீது எழுந்து வருகிறது.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகையான மன்யா ஆனந்த் நேர்காணல் ஒன்றில், “நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். பின், அவரே ஒப்பந்தமானால் சில உடன்பாடுகள் இருக்கும் என்றார்.

என்னால் படுக்கைக்கு எல்லாம் வர முடியாது என கறாராகச் சொன்னேன். உடனே, அவர் நாயகன் தனுஷ் ஆக இருந்தாலுமா? என்றார். எப்படி இப்படி வெளிப்படையாக கேட்க முடிகிறது என அதிர்ச்சியாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இது திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கடந்தாண்டு தனுஷ் மேலாளர் ஸ்ரேயஸ், ”நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக என் பெயரையும் தொடர்பு எண்ணையும் பயன்படுத்தினால் அது போலியானது. அதில் உண்மையில்லை” என பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X