2024 மே 18, சனிக்கிழமை

பாடகர் வேல்முருகன் மீது பொலிஸில் புகார்

Freelancer   / 2024 மே 13 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் தகராறு செய்து தாக்கியதாக பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வழிப்பாதையாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், அந்த வழியாக நேற்று மாலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தனது காரில் சென்றுள்ளார். இதையடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணியாளர்களிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை, வேல்முருகன் அவதூறான வார்த்தையால் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த வடிவேல், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதையடுத்து அதிகாரி வடிவேல், விருகம்பாக்கம் பொலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருகம்பாக்கம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இதே போன்று பாடகர் வேல்முருகன், கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி, சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .