S.Renuka / 2026 ஜனவரி 05 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

"படத்துல எனக்கு ஹீரோயின் இல்ல..." என முதன்முறையாக நடிகராக களம் இறங்கியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் ஏ. ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் படம் 'MOONWALK'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இப்படத்தில் முதன் முறையாக நடிகராக களம் இறங்கியுள்ளது பற்றி கேட்கப்பட "நான் 97இல் `வந்தே மாதரம்' சமயத்தில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் ஒரு சின்ன சீன் அவ்வளவு தான். ஹீரோயினெல்லாம் கிடையாது. அந்தக் காட்சியை இரண்டு வருடங்களாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என 10 நிமிடத்தில் எடுத்து முடித்துவிட்டோம். பிரபுதேவா இந்த உலகத்தின் ஐகான். இந்தியாவின் பெருமை. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago