2025 மே 14, புதன்கிழமை

பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த அஜீத்

George   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜீத் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜீத்தின் வீட்டுக்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் கிட்டத்தட்ட 10 கிலோமீற்றர் தூரம் என்பதால் தினமும் அவர்களை அழைத்து வரவும், திரும்ப கொண்டுபோய் விடவும் வான் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், அணமையில் அஜீத் வீட்டிலிருந்த சமயம் அவரது பணியாளர்கள் வரும் வான் ஒரு சில நிமிடங்கள் காலதாமதமாக வந்துள்ளது. பணியாளர்கள் தங்களது தாமதத்துக்காக அஜீத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அப்போது தாமதத்துக்கான காரணத்தை அஜீத் கேட்டபோது, முதல் நாள் இரவு முழுவதும் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் மின்சாரம் இல்லாததால், சரியாக தூங்கவில்லை. அதனால்தான் காலதாமதமாக வர நேர்ந்தது என்று பணியாளர்கள் கூறியுள்ளனர்.

உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் இன்வெர்ட்டர் பொருத்த அஜீத் உத்தரவிட்டுள்ளாராம். அதிலும் தன் வீட்டில் எந்தமாதிரியான இன்வெர்ட்டரை பயன்படுத்துகிறேனோ, அதே தரத்துக்கு அவர்கள் வீட்டிலும் பொறுத்தமாறும் சொல்லியுள்ளாராம். இதனால் பணியாளர்கள் அனைவரும் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .