2022 ஜூலை 04, திங்கட்கிழமை

பொதுத்தேர்வில் சூர்யா மகள் வாங்கிய மதிப்பெண் இதுதான்!

Freelancer   / 2022 ஜூன் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'சில்லுனு ஒரு காதல்' படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருப்பார்கள்.

பின்பு 2006 ஆம் ஆண்டு ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூர்யா மகள் தியா வாங்கியுள்ள மதிப்பெண்களின் விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதையடுத்து தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 487 மதிப்பெண்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .