Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 05 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பைக் யூட்யூபராக வளம் வந்து கொண்டிருப்பவர் TTF வாசன். விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று யூட்யூபில் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அதிவேகமாக பயணம் செய்வது சட்டத்திற்கு முரணான சாகசங்களை செய்வது என பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி இன்னும் பிரபலமானார்.
அண்மையில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் பூஜை எல்லாம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் TTF வாசன் விபத்தில் சிக்கி இருக்கக்கூடிய அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை அமைந்தகரை அருகே உள்ள ஒரு பகுதியில்TTF வாசன் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் பைக்கில் சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கார் மீது மோதியதால் காரின் முன் பகுதியும் பல பலமாக சேதம் அடைந்திருக்கிறது. இந்த விபத்தில் TTF வாசன் சிறு காயங்கள் உடன் தப்பி இருக்கிறார்.
கார் விபத்துக்குள்ளானவுடன் அவர் அதிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
13 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
2 hours ago